Sunday 14 June 2015

சோழர்களும் சம்புவராயர்களும் க்ஷத்ரியர்கள்



சோழ மன்னர்கள் தங்களை "க்ஷத்ரியர்கள்" என்று கல்வெட்டுக்களிலும் செப்புபட்டையங்களிலும் சொல்லியிருக்கிறார்கள்.  சோழர்கள் காலத்தில் குறுநில மன்னர்களாக இருந்த வன்னியர் சமூகத்தை சேர்ந்த "சம்புவராய அரசர்கள்" தங்களை  "சகல புவன சக்கரவர்த்திகள்" என்று பல கல்வெட்டுகளில் குறிப்பிடுகிறார்கள்.  இது அவர்களை "க்ஷத்ரியர்கள்" என்று நிறுவுகிறது.  இதைப் போன்ற புகழ் மிகும் கீர்த்திகளை "க்ஷத்ரிய அரசர்கள்" மட்டுமே அக் காலத்தில் பயன்படுத்தமுடியும்.


மேலும் சம்புவராய அரசர்கள் சோழ அரசர்களைப்  பற்றி குறிப்பிடும்பொழுது, "எங்களது வம்சத்தவர்கள்" என்று நேரிடையாக  தெரிவிக்கிறார்கள்.  இச் செய்தியானது காஞ்சிபுரம் திருவாலீஸ்வரர் கோயிலில் உள்ள கி.பி.1171 ஆம் ஆண்டை சார்ந்த இரண்டாம் ராஜாதிராஜ சோழனின் கல்வெட்டின் மூலம் உறுதிச் செய்யப்படுகிறது.


அக்னியில் தோன்றிய சந்திர வம்சத்து (யது குலம்) க்ஷத்ரிய மன்னனான குலசேகர பாண்டியனுக்கும், இலங்கை படைக்கும் போர் நடைபெற்றது.  இப் போருக்கு சோழர்கள் பாண்டியர்களுக்கு படை உதவி செய்தார்கள். எதிரிலிச் சோழ சம்புவராயன் தலைமையிலான  சோழர் படைகள் பாண்டியர்களுக்கு உதவியது. இப் போருக்கு தலைமை வகித்த வன்னிய அரசனான "எதிரிலிச் சோழ சம்புவராயன்", இலங்கை படைகளை தோற்கடித்து அப் போரில் வென்றார்கள்.  இதைப்  பற்றி குறிப்பிடும் கல்வெட்டு தான் காஞ்சிபுரத்தில் உள்ள திருவாலீஸ்வரர் கோயிலில் உள்ளது (கி.பி.1171).  அதில் சம்புவராய அரசர் கிழ் கண்டவாறு குறிப்பிடுகிறார்கள் :-


"சோழராஜ்யத்துக்கு ராஜாவாநார் அவர்கள் பரிபாலிப்பது எங்கள் வம்சத்து தர்ம்மம் பரிபாலிப்பது"


இக் கல்வெட்டில் குறிப்பிடப்படும் செய்தி என்னவென்றால், "சோழ ராஜா அவர்கள் ஆட்சிசெய்யும் தர்மமானது எங்கள் க்ஷத்ரிய வம்சத்து தர்மமாகும்" என்று வன்னிய அரசனான எதிரிலிச் சோழ சம்புவராயர்  அவர்கள் குறிப்பிடுகிறார்கள். "எங்கள் வம்சத்து தர்மம்" என்பது "எங்கள் க்ஷத்ரிய வம்சத்து தர்மம்" என்பதாகும்.  


இவ் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கல்வெட்டின் மூலம் தெரியவரும் செய்தி என்னவென்றால், சோழர்களும் மற்றும் சம்புவராயர்களும் ஒரே வம்சத்தவர்கள் ஆவார்கள்.  அதாவது "க்ஷத்ரிய வம்சத்தவர்கள்".


வன்னிய அரசர்களான "காடவராயர்கள்" (பல்லவர்கள்) சோழர்களிடம் மிக நெருங்கிய திருமண உறவு கொண்டவர்கள் ஆவார்கள். அதைப்போலவே காடவராயர்களும், சம்புவராயர்களும் மிக நெருங்கிய உறவினர்கள் என்பதை மூன்றாம் குலோத்துங்கச் சோழனின் ஆறகளூர் கல்வெட்டு ஒன்று குறிப்பிடுகிறது. அக் கல்வெட்டில் எதிரிலிச் சோழ சம்புவராயர்,  காடவராய அரசரை "மைச்சுனனார்" (மச்சான், Brother-in-law) என்று குறிப்பிடுகிறார்கள்.  மூன்றாம் குலோத்துங்கச் சோழனின் மகளை, காடவன் கோப்பெருஞ்சிங்கப் பல்லவன் திருமணம் செய்துள்ளான்.  க்ஷத்ரியனான சோழன், தன் மகளை ஒரு க்ஷத்ரியனுக்கு தான் திருமணம் செய்து தருவான் என்பது இயல்பானதே ஆகும்.  


எனவே சோழர்கள், காடவராயர்கள் மற்றும் சம்புவராயர்கள் அனைவரும் "வன்னிய குல க்ஷத்ரிய" சமூகத்தை சேர்ந்த மன்னர்கள் என்பது வரலாற்றில் உறுதிச் செய்யப்படுகிறது.  சோழர்களின் குல தெய்வமான தில்லை நடராஜர் கோயிலில் உள்ள புனிதப் படியான பஞ்சாக்ஷரப்படியில் "திருஅபிசேகம்" செய்து ராஜ சபையான ஆயிரங்கால் மண்டபத்தில்  "திருமுடிசூடுபவர்கள்"  சோழ வேந்தர்கள் மட்டுமே என்பது வரலாறு ஆகும்.  அத்தகையவர்கள் "பிச்சாவரம் சோழ வேந்தர்கள்"  ஆவார்கள். அவர்கள் "வன்னிய குல க்ஷத்ரியர்கள்" ஆவார்கள்.


----- xx ----- xx ----- xx -----